சிங்கப்பூர் - இந்தியா ஆகாயப் படைகள் மேலும் 5 ஆண்டு கூட்டுப் பயிற்சி

சிங்கப்பூர் - இந்தியா ஆகாயப் படைகள் மேலும் 5 ஆண்டு கூட்டுப் பயிற்சி

1 mins read
d078bba2-042f-40ec-9a19-c0a4ae1bb1c4
-

சிங்கப்பூர் ஆகாயப்படை இந்திய ஆகாயப்படையுடன் சேர்ந்து இந்தி யாவின் கலைகுண்டா ஆகாயப் படை நிலையத்தில் மேலும் ஐந்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்து பயிற்சி செய்வதற்கான இருதரப்பு ஒப்பந்தம் நேற்று புதுப்பிக்கப் பட்டது. இருநாட்டு ஆகாயப்படைகளும் கூட்டு ராணுவப் பயிற்சிகள் நடத்துவதற்கு வழிவகுக்கும் புதுப்பிக் கப்பட்ட ஒப்பந்தத்தில் சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சின் நிரந்தரச் செயலாளர் சான் யெங் கிட்டும் இந்தியாவின் தற்காப்புச் செயலாளர் ஜி மோகன் குமாரும் தற்காப்பு அமைச்சில் கையெழுத்திட்டனர்.

"இந்திய ஆகாயப்படையின் அதிநவீன எஸ்யு=30 ரக போர் விமானத்துடன் பயிற்சி செய்யவும், தோழமையையும் பரஸ்பர புரிந்துணர்வையும் அனைத்து நிலைகளிலும் வலுவாக்கக்கூடிய வாய்ப்புகளையும்" கூட்டுப் பயிற்சி வழங்கும் என்று சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சின் செய்தி அறிக்கை குறிப்பிட்டது. ஆகாயப்படை ஒப்பந்தம் முதன்முதலில் 2007ம் ஆண்டு ஒப்பந்தம் புதுப்பிப்பு கையெழுத்தாகி, 2012ல் புதுப்பிக் கப்பட்டது.

தற்காப்பு அமைச்சர் டாக்டர் இங் எங் ஹென் (பின்னால் நடுவில் நிற்பவர்) முன்னிலையில் கூட்டுப் பயிற்சி ஒப்பந்தத்தில் கையொப்பம் இடும் இந்தியத் தற்காப்புச் செயலாளர் திரு மோகன் குமார் (இடது), நிரந்தரச் செயலாளர் சான் யெங் கிட். படம்: தற்காப்பு அமைச்சு