அப்பர் தாம்சன் சாலையில் கனமழையால் திடீர் வெள்ளம்

தீவின் பல பகுதிகளில் நேற்று பிற்பகல் கனமழை பெய்தது. அதில் அப்பர் தாம்சன் சாலையில் திடீர் வெள்ளம் ஏற்பட்டு சாலைப் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. அப்பகுதியில் ஒரு சாலையில் கட்டுமானப் பணிகளுக்காக மூடப்பட்டதால் போக்குவரத்து நிலைமை மேலும் மோசமானது. ஜாலான் பெலடினாவுக்குப் பிறகு சிலேத்தார் விரைவுச்சாலை நோக்கிச் செல்லும் சாலைகள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தனது டுவிட்டர் இணையப் பக்கத்தில் நேற்று பதிவிட்டது.

அப்பர் தாம்சன் சாலையிலும் பல்வேறு சாலைகளிலும் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட வாகனங்கள். படம்: ஃபேஸ்புக்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!