புதிய ரயில் சமிக்ஞை முறை நிலப் போக்குவரத்து ஆணையம்

இவ்வாண்டு மார்ச் மாதத்திலிருந்து வடக்கு=தெற்கு ரயில் தடத்தில் புதிய சமிக்ஞை முறையை அமலாக்கவிருக்கிறது. புதிய சமிக்ஞை முறையுடன் 120 விநாடிகளுக்குப் பதிலாக 100 விநாடிகள் இடைவெளியில் இரயில்கள் வேகமாகப் பயணம் செய்ய முடியும். தொடக்கத்தில் பயணிகள் எண்ணிக்கைக் குறைவாக இருக்கும் உச்சமற்ற நேரங்களில் புதிய சமிக்ஞை முறை நடப்பிலிருக்கும் என்று ஆணையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. எடுத்துக்காட்டாக, இரயில் சேவையின் கடைசி ஒரு மணி நேரத்திலும் ஞாயிற்றுக் கிழமைகளிலும் புதிய சமிக்ஞை முறை நடப்பிலிருக்கும். பிறகு, படிப்படியாக உச்ச நேரத்திற்கும் சமிக்ஞை முறை நீட்டிக்கப்படும் என ஆணையம் தெரிவித்தது.

உத்தேச ஆரம்பப் பிரச்சினை களைக் கையாளுவதற்காகப் படிப்படியான அணுகுமுறை மேற்கொள்ளப்படுகிறது. "சமிக்ஞை முறையை மாற்றும் பணி சிக்கலானது என்பதாலும் ஆரம்பத்தில் குறிப்பிடத்தக்க பிரச்சினைகளை எதிர்நோக் கியதாக அனைத்துலக இரயில் நடத்துநர்கள் ஆலோசனை கூறியதாலும் நிலப் போக்குவரத்து ஆணையம் புதிய சமிக்ஞை முறைக்குப் படிப்படியாக மாறும்," என்றது ஆணையம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!