எல்லா மலேசிய எல்லைகளிலும் கட்டணம் இருந்தால் சிங்கப்பூர் தனது கட்டணத்தை மீட்டுக்கொள்ளும்

மலேசியா தனது அனைத்து நில எல்லைகளிலும் சாலைக் கட்ட ணத்தை வசூலித்தால் மட்டுமே சிங்கப்பூர் அண்மையில் அறிவித்த தனது $6.40 கூடுதல் சாலைக் கட்டணத்தை மீட்டுக்கொள்ளும் என்று அதன் போக்குவரத்து அமைச்சர் கோ பூன் வான் தெரி வித்துள்ளார் என்று சிங்கப்பூருக் கான மலேசியத் தூதர் திரு இளங்கோ கருப்பண்ணன் கூறிய தாக தி ஸ்டார் நாளிதழ் செய்தி வெளியிட்டது. மலேசியாவின் சாலைக் கட்ட ணம் தற்போது தனது நாட்டை மட்டும் பாதித்துள்ளதால் வேறு வழியின்றி நாங்கள் கூடுதல் சாலைக் கட்டணத்தை அறிவித் தோம் என்று சிங்கப்பூரின் போக்கு வரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் துவாஸ், உட்லண்ட்ஸ் எல் லைகளைக் கடக்கும் அனைத்து வெளிநாட்டு வாகனங்களுக்கும் மலேசியா 20 ரிங்கிட் சாலைக் கட்டணம் வசூலித்து வருகிறது.

இந்த இரு எல்லைகளைக் கடக்கும் கிட்டத்தட்ட எல்லா வாக னங்களும் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்டவை. ஆனால், தாய் லாந்து எல்லையைக் கடந்து மலே சியாவுக்குள் வரும் வாகனங்க ளுக்கு 20 ரிங்கிட் சாலைக் கட்ட ணம் வசூலிக்கப்படுவதில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!