வசதி குறைந்த சிறார்களுக்கு புதிய கற்றல் இடம்

குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களைச் சேர்ந்த சிறார் களுக்கும் இளையர்களுக்கும் விழாக்காலத்தில் மகிழ்ச்சியை ஏற் படுத்த சிட்டி டெவலப்மண்ட்ஸ் லிமிடெட் (சிடிஎல்) நிறுவனம் லிம் பாங் வட்டாரத்தில் புதிய கற்றல் இடத்தை அமைத்துள்ளது. வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றம், தேசிய நூலக வாரியம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் (என்டியு) ஆகியவற்றின் ஆதரவுடன் சிடிஎல் நிறுவனம் இந்தக் கற்றல் இடத்தை உருவாக் கியுள்ளது. லிம்பாங் வட்டாரத்தில் வசிக்கும் சுமார் 200 சிறார்கள், இளையர்கள் அன்றாடம் பள்ளி முடிந்தவுடன் தரமான வழியில் நேரத்தைச் செலவழிக்க இந்த இடம் ஒரு தளமாக விளங்கும். உற்சாகமளிக்கும் வாசகங் களைக் கொண்ட துடிப்புமிக்க வண்ணமயமான இந்த கற்றல் இடத்தைத் தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்று அதிகாரபூர்வமாகத் தொடங்கி வைத்தார்.

"இன்றைய இளையர்களே எதிர்காலத்தின் நம்பிக்கையாக விளங்குவர். எனவே, வசதி குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த இளையர்கள் பின்தங்கிவிடாமல் இருக்க அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டுமெனில் கூடுத லான நிறுவன, சமூகப் பங்காளி களை இணைப்பது முக்கியம்," என்று வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்ற மேயர் டாக்டர் டியோ ஹோ பின் கருத்துரைத்தார்.

லிம்பாங் வட்டாரத்தில் அமைந்துள்ள மாணவர்களுக்கான கற்றல் இடத்தை நேற்று திறந்து வைத்த தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் அங்குள்ள மாண வர்களுக்கு கதை சொல்கிறார். அதை இதர அடித்தளத் தலைவர்களுடன் கவனிக்கிறார் வடமேற்கு மாவட்ட மேயர் டாக்டர் டியோ ஹோ பின் (வலமிருந்து 2வது). படம்: மக்கள் கழகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!