புகைப்போருக்கான கூடங்கள்

புகைபிடிப்பவர்களுக்காகவே பிரத் தியேகமாக 42 கூடாரங்கள் நீ சூன் சவுத்தில் அமைக்கப் பட்டுள்ளன. 3 மீ. x 3 மீ. பரப்பளவிலான அந்தக் கூடாரங் களில் புகைபிடித்துக் கொள்ளும் படி புகைபிடிப்போர் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். சில கூடாரங்கள் வீடமைப்பு வளர்ச்சிக் கழக புளோக்குகள் இருக்கும் பகுதியில் இருந்தாலும் அதன் கீழ்த்தளத்தில் குடியிருப் போர், புகைபிடிப்போர் வெளியிடும் புகையால் பாதிப்புக்கு உள்ளாகாத வண்ணம் அவை புளோக்குகளில் இருந்து சற்றுத் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாண்டு இறுதிக்குள் மொத்தம் 50 புகைப்போர் கூடாரங் கள் அமைக்கப்படவுள்ளதாக அப்பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி லீ பீ வா கூறினார். கூடாரங்களைத் திறந்து வைக்கும் தொடக்க நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு சொன்னார். "புகைபிடிக்கும் பழக்கம் இல்லாத குடியிருப்பாளர்கள் எதிர்கொள்ளும் இரண்டாம் நிலைப் புகையின் அளவு, சிகரெட்டுத் துண்டுகள் குப்பை களாகச் சிதறிக் கிடப்பது ஆகியன குறைந்திருப்பதாக அப்பகுதி குடியிருப்பாளர்கள் குறிப் பிட்டுள்ளனர். புகைபிடிப்போரும் பொதுவாக ஒத்துழைப்பு நல்குபவர்களாகவே இருக்கின் றனர்," என்று திருவாட்டி லீ பீ வா கூறினார்.

நீ சூன் சவுத்தில் அமைக்கப்பட்டிருக்கும் புகைப்போர் கூடாரங்களில் ஒன்று. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!