ஜெட்ஸ்டார் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: சாங்கியில் தரையிறங்கியது

1 mins read

சிங்கப்பூரிலிருந்து புக்கெட் செல்வதற்காகப் புறப்பட்ட ஜெட்ஸ்டார் விமானம் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேற்று சாங்கி விமான நிலையத்துக்கே திரும்பியது. நேற்று பிற்பகல் 2.40 மணியளவில் கிளம்பிய 3K535 எனும் அந்த விமானம் விமான நிலையத்துக்குத் திரும்ப அனுமதி கோரியது. அனுமதி வழங்கப்பட்டதும் சாங்கி விமான நிலையத்துக்குத் திரும்பியதாக விமான நிலையப் பேச்சாளர் கூறினார். நேற்று பிற்பகல் 3.55 மணியளவில் சாங்கி விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் பாதுகாப்பாக அது தரையிறங்கியது. விமானத்தில் ஏற்பட்டிருக்கும் தொழில்நுட்பக் கோளாறு பற்றி விசாரித்து வருவதாக ஜெட்ஸ்டார் பின்னர் குறிப்பிட்டது.