மின்தூக்கிகளை மாற்ற நகர மன்றங்கள் 14% நிதி ஒதுக்கவேண்டும்

மின்தூக்கி மாற்று நிதிக்கென பிரத்தியேகமாக எல்லா நகர மன் றங்களும் இவ்வாண்டு ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து குடியிருப் பாளர்களிடம் இருந்து வசூலிக் கப்படும் சேவை, பராமரிப்புக் கட்டணங்கள், அரசாங்க மானி யங்கள் ஆகியவற்றில் குறைந்தது 14 விழுக்காட்டை ஒதுக்க வேண்டும். நகர மன்றம் வசூலிக்கும் தொகையிலிருந்து குறைந்தபட் சம் 26% எதிர்காலத் தேவை களுக்காக ஒதுக்கப்பட்டு வரு கிறது. இந்நிலையில், புதிய பிரத் தியேக மின்தூக்கி மாற்று நிதிக்கும் இனிமேல் நகரமன்றங்கள் இனி நிதி ஒதுக்கவேண்டும். வீடமைப்பு வளர்ச்சிக் கழக குடியிருப்புகளில் உள்ள மின் தூக்கிகளின் செயல்பாட்டையும் நம்பகத்தன்மையையும் மேம்படுத் துவதற்காக கடந்த செப்டம்பரில் இந்தப் பிரத்தியேக மின்தூக்கி மாற்று நிதி குறித்து அறிவிக்கப் பட்டது.

இந்நிலையில், அதற்கு நகர மன்றங்கள் எவ்வளவு தொகையை ஒதுக்க வேண்டும் என்பதை நேற்று அறிவித்த தேசிய வளர்ச்சி அமைச்சு, அதை அமல்படுத்து வதற்காக நகர மன்றங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. அத்துடன், நகர மன்றங் களுக்கு வழங்கப்பட்டு வரும் சேவை, பராமரிப்புக் கட்டண மானியங்களையும் அதிகரிக்க உள்ளதாகவும் அமைச்சு தெரி வித்தது. மின்தூக்கி மாற்று நிதிக் காக நகர மன்றங்களின் பங்க ளிப்புக்கு ஈடான தொகையை வழங்கும் விதமாக கூடுதல் மானியங்களும் அளிக்கப்படும் என்றும் அமைச்சு குறிப்பிட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!