'ரிசோர்ட்ஸ் வோர்ல்டு' மீன் காட்சியகத்தில் கடலடி நடனம்

'ரிசோர்ட்ஸ் வோர்ல்டு' மீன் காட்சியகத்தில் கடலடி நடனம்

1 mins read
d80f75de-7e9b-4d15-a55d-0e9c5d6bda91
-

சீனப் புத்தாண்டு கொண்டாட்டக் காலத்தின்போது ரிசோர்ட்ஸ் வேல்டு செந்தோசாவில் இருக்கும் தென்கிழக்கு ஆசிய மீன்காட்சி சாலைக்குச் செல்வோர் அருமையான கடலடிக் கலைக்காட்சியைக் கண்டு ரசிக்கலாம். குரங்கு ஆண்டு முடிந்து சேவல் ஆண்டு பிறப்பதைச் சித்தரிக்கும் வகையில் அந்தக் கலைக்காட்சி நடக்கும். இந்த மீன்காட்சி சாலையில் இத்தகைய நிகழ்ச்சி இப்போதுதான் முதல்தடவையாக நடத்தப்படுகிறது. முக்குளிப்பாளர்கள் கடல்நாக நடனத்தையும் தண்ணீருக்குள் அரங்கேற்றுவார்கள். நீர்க்குமிழிகளும் இசையும் சிறப்பு அம்சமாக இடம்பெற அந்த நிகழ்ச்சி மிகவும் உயிரோட்டத்துடன் திகழும். நிகழ்ச்சி நாளை வெள்ளி முதல் பிப்ரவரி 11 வரை நாள்தோறும் பிற்பகல் 2.15 மணிக்கும் மாலை 4.15 மணிக்கும் என இரு முறை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ரிசோர்ட்ஸ் வோர்ல்டு செந்தோசாவில் மீன்காட்சியகத்தில் கடலுக்கு கீழே கடல்நாக நடன நிகழ்ச்சி ஊடகத்திற்கு நேற்று நடத்திக் காட்டப்பட்டது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்