25,500 பெட்டி கள்ள சிகரெட்டுகள் சிக்கின

25,500 பெட்டி கள்ள சிகரெட்டுகள் சிக்கின

1 mins read
b47d47b8-219b-4675-a775-cd133ab73d1e
-

சிங்கப்பூர் சுங்கத்துறை, தீர்வை செலுத்தப்படாத 25,500 பெட்டி சிகரெட்டுகளை இரண்டு நாட் களில் கைப்பற்றி இருக்கிறது. கடந்த 2015 ஏப்ரலுக்குப் பிறகு இந்த அளவுக்கு ஆக அதிகமாக கள்ள சிகரெட் பிடிபட்டிருப்பது இதுவே முதல் தடவை. இந்த மாதம் 17ஆம் தேதியும் 23ஆம் தேதியும் அதிகாரிகள் நடத்திய சோதனைகளில் இவை பிடிபட்டன. சிங்கப்பூர் சுங்கத்துறை அதி காரிகள் இந்த மாதம் 17ஆம் தேதி ஜூரோங் போர்ட் ரோட்டில் இருக் கும் தளவாடப் போக்குவரத்து நிறு வனம் ஒன்றில் சோதனை நடத் தினர். அந்தக் கட்டடத்தில் பழுப்பு நிற பெட்டிகளில் தீர்வை செலுத்தப் படாத 4,900 பெட்டி சிகரெட்டுகளை அதிகாரிகள் கைப்பற்றினர். சிங்கப்பூரர்களான 59 வயது ஆடவர் ஒருவரும் 54 வயது மாது ஒருவரும் 37 வயது மலேசியர் ஒருவரும் கைதானார்கள்.

பைனியர் செக்டர் 3ல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கொள்கலன்களில் ஜனவரி 23ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் மொத்தம் 20,600 பெட்டி சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன. படம்: சிங்கப்பூர் சுங்கத்துறை