தண்டவாளக் கோளாற்றுக்கும் குறுக்குச் சட்ட மாற்றத்துக்கும் தொடர்பில்லை: எஸ்எம்ஆர்டி

தண்டவாளக் கோளாற்றுக்கும் குறுக்குச் சட்ட மாற்றத்துக்கும் தொடர்பில்லை: எஸ்எம்ஆர்டி

1 mins read

அண்மைய வாரங்களில் கிழக்கு =மேற்கு ரயில் பாதையில் சேவைத் தடைகளை ஏற்படுத்திய தண்ட வாளக் கோளாற்றுக்கும் வடக்கு= தெற்கு, கிழக்கு=மேற்கு பாதை யில் டிசம்பரில் முடிவடைந்த தண்ட வாள குறுக்குச் சட்டம் மாற்றும் பணிக்கும் சம்பந்தம் இல்லை என எஸ்எம்ஆர்டி நேற்று வலைப் பதிவு ஒன்றில் தெரிவித்தது. "தண்டவாள மின்னியல் கட் டமைப்பானது சமிக்ஞை முறை யின் ஒரு பகுதி. மாறாக, அது குறுக்குச் சட்ட உள்கட்டமைப் பின் ஒரு பகுதி அல்ல," என அந் நிறுவனம் விளக்கம் அளித்தது. தண்டவாள மின்னியல் கட் டமைப்பு செயலிழக்கும்போது பாது காப்பைக் கருத்தில் கொண்டு பாதிக்கப்பட்ட பகுதியில் ரயில்கள் மெதுவாக செல்லவேண்டியிருக்கும். இதனால் உச்சநேரங்களில் கூட்ட நெரிசல் ஏற்படக்கூடும். ரயில்களுக்கு இடையில் பாதுகாப்பான தூரம் இருக்க வேண்டும் என்பதால் அவை தற்காலிகமாக நின்று மீண்டும் நகரக்கூடும்.