மானபங்க செயலுக்காக மருந்தியல் தொழில்நுட்பருக்கு $3,000 அபராதம்

மானபங்க செயலுக்காக மருந்தியல் தொழில்நுட்பருக்கு $3,000 அபராதம்

1 mins read

மின்தூக்கியில் 16 வயது மாணவியை மானபங்கம் செய்த‑தற்காக மருந்தியல் தொழில்நுட்பரான 51 வயது சியுவ் டெக் சியாங்கிற்கு நேற்று $3,000 அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு மே 5ஆம் தேதி காலை 6.10 மணியளவில் அம்மாணவியின் பிட்டத்தைத் தொட்டுக் கிள்ளியதை அவர் ஒப்புக்கொண்டார். சியுவ் இருந்த வீவக மின்தூக்கியில் பள்ளிச் சீருடையில் இருந்த மாணவி ஏறினார். மின்தூக்கி கீழே இறங்கியபோது மாணவியின் பிட்டத்தைத் தமது இடது கையால் அவர் கிள்ளி னார். அச்சம் அடைந்த மாணவி திரும்பிப் பார்க்கவில்லை. மின்தூக்கி முதல் தளத்திற்கு இறங்கியவுடன் வெளியேறிய மாணவி, சம்பவம் குறித்து பள்ளி ஆசிரியரிடம் கூறினார். பின் போலிஸ் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டது.