வர்த்தக உரிமை, வர்த்தக அடையாளச் சின்னத்தைப் பதிய கட்டணம் குறைவு

வர்த்தக உரிமை, வர்த்தக அடையாளச் சின்னத்தைப் பதிய கட்டணம் குறைவு

1 mins read

நிறுவனங்களும் தொழில்முனைவர்களும் தங்களுடைய வர்த்தக உரிமை, வர்த்தக அடையாளச் சின்னத்தைப் பாதுகாக்கும் வகையில் அவற்றைப் பதிவதற்கான கட்டணம் ஏப்ரல் 1 முதல் 30% வரை குறைக்கப்படுகிறது. புத்தாக்கத்துக்கு ஊக்கமூட்டவும் மற்ற நாடுகளுடன் ஒப்பிடக்கூடிய அளவில் கட்டணம் இருப்பதை உறுதிப்படுத்தவும் தன்னுடைய கட்டணத்தைக் காலக்கிரம முறைப்படி மறுபரிசீலனை செய்துவருவதாக சிங்கப்பூர் அறிவுச் சொத்து அலுவலகம் தெரிவித்தது. இதன் ஒரு பகுதியாக கட்டணம் குறைக்கப்படுகிறது. வர்த்தக உரிமை பரசோதனை அறிக்கையைப் பெற கோரிக்கை விடுப்போருக்கு ஏப்ரல் 1 முதல் கட்டணம் குறையும். வர்த்தக அடையாளச் சின்னத்துக்கு விண்ணப்பிக்கும் உரிமையாளர்களுக்கு 30% கட்டணக் கழிவு கிடைக்கும்.