கட்டட நிர்வாகச் சட்ட திருத்தம்: மக்கள் கருத்து தெரிவிக்கலாம்

கட்டட நிர்வாகச் சட்ட திருத்தம்: மக்கள் கருத்து தெரிவிக்கலாம்

1 mins read

கட்டட நிர்வாகம் மற்றும் பட்டா நிர்வாகச் சட்டத்திற்கு முக்கியமான உத்தேச திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு இருக்கின்றன. அந்தத் திருத்தங்கள் தொடர்பில் கருத்து, யோசனைகளைத் தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள், கடைசியாக நடக்கவுள்ள பொது கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்துகொண்டு அவ்வாறு செய்யலாம் என்று கட்டட, கட்டுமான ஆணையம் அறிவித்து இருக்கிறது. பட்டா கட்டடங்கள் நிர்வகிக்கப்படுவதன் தொடர்பிலான ஆளுமையை மேம்படுத்தவும் அந்த நடைமுறைகளில் ஒளிவுமறைவு இல்லாத நிலையை மேம்படுத்தவும் சில சட்ட அம்சங்களை இன்னும் சிறப்பாக விளக்கவும் உதவும் வகையில் அந்தத் திருத்தங்கள் ஒரு நகல் மசோதா வடிவில் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. சட்ட திருத்தங்கள் பற்றி தங்கள் கருத்துகளை, யோசனைகளைத் தெரிவிக்க விரும்புவோர் பிப்ரவரி 21ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அஞ்சல் வழியாக அல்லது தொலைப்பிரதி வழியாக அல்லது மின்னஞ்சல் (bca_bmsma_ review@bca.gov.sg / bca_enquiry@bca.gov.sg) மூலமாக அவ்வாறு செய்யலாம். மேல்விவரங்களுக்கு இந்த ஆணையத்தின் இணையத்தளத்திற்குச் செல்லலாம்.