தேசிய சேவை கடமையிலிருந்து 10 ஆண்டுகாலம் தவறிவிட்ட ஆடவர் ஒருவருக்கு நான்கு மாதச் சிறைத்தண்டனை விதிக் கப்பட்டது. ஜோனாத்தன் டான் ஹுய் இன், 28, என்ற அந்த ஆடவர் மூத்த வழக்குரைஞர் டான் சீ மெங்கின் மூத்த மகன். அவர் 2004 டிசம்பர் 22க்கும் 2015 மே 4ஆம் தேதிக்கும் இடை யில் சிங்கப்பூரைவிட்டு வெளியே இருந்ததாகக் கூறும் இரண்டு குற்றச்சாட்டுகளின் பேரில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
டான் அவரின் தம்பி, அக்காள், தாயார் ஆகியோர் 2000 டிசம்பர் 1ஆம் தேதி கனடாவுக்கு குடி பெயர்ந்தனர். தந்தை மட்டும் சிங்கப்பூரிலேயே இருந்து வந்தார். ஜோனாத்தன் டானுக்கு 2005ல் கனடா குடியுரிமை கிடைத்தது. 2005 டிசம்பர் 1ஆம் தேதிக்கும் 2006 ஜூன் 30ஆம் தேதிக்கும் இடையில் அவரின் சிங்கப்பூர் முகவரிக்கு மூன்று கடிதங்கள் அனுப்பப்பட்டு தேசிய சேவைக்குப் பதியும்படி கேட்டுக்கொள்ளப்பட் டது. பதில் இல்லை.
ஜோனாத்தன் டான் (இடது) அவரின் தந்தையான மூத்த வழக்கறிஞர் டான் சீ மெங் இருவரும் நீதிமன்றத்தைவிட்டு வெளியேறுகிறார்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்.

