கண்ட இடங்களிலும் சுற்றித் திரியும் கோழிகளை அழித்துவிட முடிவு

கண்ட இடங்களிலும் சுற்றித் திரியும் கோழிகளை அழித்துவிட முடிவு

1 mins read

சிங்கப்பூர் முழுவதும் கண்ட இடங்களிலும் திரியும் கோழிகளைக் கொன்றுவிட அதிகாரிகள் திட்டமிடுகிறார்கள். இரைச்சல் பற்றி புகார் வரும்போதெல்லாம் தான் நடவடிக்கை எடுக்கப்போவதாக வேளாண், உணவு கால்நடை மருத்துவ ஆணையம் (ஏவிஏ) தெரிவித்து இருக்கிறது. இதைப்போலவே தேசிய பூங்காக் கழகமும் பரிசீலித்து வருகிறது. இத்தகைய கோழிகள் சிங்கப்பூரின் அரிய இன கோழிகளுடன் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு அதன்வழி அரிய இன கோழிகளின் இனங்கள் அழித்துவிடக்கூடும் என்று கழகம் கவலைப்படுகிறது. இரைச்சல் காரணமாக இத்தகைய கோழிகளைக் கட்டுப்படுத்தும்படி கேட்டு வேண்டுகோள் வந்திருப்பதாக வேளாண், உணவு கால்நடை மருத்துவ ஆணையத்தின் விலங்கு நிர்வாக குழும இயக்குநர் குமாரி ஜெசிகா குவோக் கூறியிருக்கிறார். இதன் தொடர்பில் பூங்காக் கழகத்துடன் 'ஏவிஏ' சேர்ந்து செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.