நிச்சயமற்ற உலகச் சூழல், சிங்கப் பூரும் அதன் மக்களும் சவால் களை எப்படி சமாளிக்க வேண்டும் என்ற இரு முக்கிய கருப்பொருட் கள் சனிக்கிழமை இரவு நடந்த இரண்டு சீனப் புத்தாண்டு விருந் துகளில் தலையெடுத்தன. அங் மோ கியோ குழுத் தொகு தியின் விருந்தில் பேசிய பிரதமர் லீ சியன் லூங், வட்டார, உலக நாடுகளுடனான உறவுமுறை பற்றி பேசுகையில், தற்போதைய சூழலில் சிங்கப்பூருக்குச் சவால்களும் வாய்ப்புகளும் இருப்பதாகக் கூறி னார். நாடும் மக்களும் முன்னேறிச் செல்லவும், மேம்படவும், நிச்சயமற்ற உலகில் வளம் பெறவும் இந்த வாய்ப்புகள் உதவும் என்றார் அவர். அமெரிக்கா, சீனாவுடனான உறவும் பல ஆண்டுகாலமாகப் படிப்படியாக வளர்ச்சி அடைந் திருக்கிறது. தற்போது புதிய நிர் வாகத்தின்கீழ் அமெரிக்காவில் மாற்றம் ஏற்பட்டாலும், இரு நாடுக ளுடனான நட்புறவையும் ஒத்து ழைப்பையும் சிங்கப்பூர் தொடர்ந்து மேம்படுத்த முடியும் என அவர் நம் பிக்கை தெரிவித்தார்.
'சிங்கப்பூரர்கள் உலகளாவிய சவால்களைப் புரிந்துகொள்ள வேண்டும்'
1 mins read

