நள்ளிரவில் கழிவறைக்குச் செல்வதற்காக படுக்கையிலிருந்து எழுந்து வந்த 70 வயது சென் சியூ யிங் கண் முன்னே அவரது அடுக்களை கான்கிரீட் கூரை இடிந்துவிழுந்தது. ஒரு கேரம் போர்ட் அளவுக்கு கான்கிரீட் பாளம் பெயர்ந்தது. மரின் டெரசில் உள்ள புளோக் 51ல் நேற்று முன்தினம் இரவு இது நிகழ்ந்ததாக ஷின் மின் நாளிதழ் தெரிவித்தது. தனக்கு முன்னால் 2 மீட்டர் தூரத்தில் பெரிய கான்கிரீட் பாளம் விழுந்தது என திருமதி சென் கூறினார். "சற்று முன்னதாகச் சென்றிருந்தாலும் என் தலை மீது பாளம் விழுந்திருக்கும். அதிர்ஷ்டவசமாகத் தப்பினேன்," என்றார் திருமதி சென். 43 வயதான அந்தக் கட்டடத்தில் கான்கிரீட் பாளம் இயற்கைச் சிதைவு காரணமாக விழுந்திருக்கலாம் என்று குறிப்பிட்ட வீடமைப்பு வளர்ச்சிக் கழகப் பேச்சாளர், வாடகை வீடான இதனைச் சரி செய்வதற்கான அனைத்துச் செலவுகளையும் வீவக ஏற்றுக்கொள்ளும் என்றார்.
நள்ளிரவில் பெயர்ந்து விழுந்த வீவக வீட்டு கான்கிரீட் கூரை
1 mins read
-

