கடந்த டிசம்பர் மாதத்தை ஒப்பு நோக்க, இவ்வாண்டு ஜனவரியில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக மறு விற்பனை வீட்டு விலைகள் 0.3% வீழ்ச்சி கண்டன. மூன்றறை வீடுகளின் விலை கள் 0.6 விழுக்காடும் நான்கறை வீடுகளுக்கான மறுவிற்பனை விலைகள் 0.5 விழுக்காடும் சரிந் தன. அதே வேளையில், ஐந்தறை மற்றும் எக்சகியூட்டிவ் வீடுகளுக் கான மறுவிற்பனை விலைகள் முறையே 0.4%, 0.9% ஏற்றம் கண்டன. முதிர்ச்சியடைந்த பேட்டை களில் வீவக மறுவிற்பனை வீட்டு விலைகள் 0.7% குறைந்தன. முதிர்ச்சியடையாத பேட்டைகளில் அந்த விலை நிலையாக இருந்தது.
மறுவிற்பனை வீட்டு விலைகள் 0.3% சரிவு
1 mins read

