யாக்கூப்: இணையப் பாதுகாப்பின் முக்கியத்துவம் அதிகரித்து கொண்டு வருகிறது

யாக்கூப்: இணையப் பாதுகாப்பின் முக்கியத்துவம் அதிகரித்து கொண்டு வருகிறது

1 mins read
15301700-788c-4b35-9a36-e76043afe51f
-

இணையத்தளம் ஒன்று புத்தம் புதிய திறன்பேசியை $200க்கு விற்கிறது - இது உண்மை என்று நம்ப முடிகிறதா? P@p4ya732! என்பது பாதுகாப்பான மறைச் சொல்லா? இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்த சிங் கப்பூர் இணையப் பாதுகாப்பு ஆணையம் நேற்று தோ பாயோ ஹப்பில் ஏற்பாடு செய்திருந்த சாலைக்காட்சியில் பதிலளிக்கப் பட்ட கேள்விகளில் இவை அடங் கும்.

இவற்றுக்கான பதில்கள்: நம்ப முடியாத அளவிற்கு ஒரு பொருள் குறைந்த விலையில் விற்கப்படுவது மோசடியாக இருக்கலாம். வலை யில் அகப்படாமல் இருக்க வாடிக் கையாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஓர் இணையத் தளத்தில் உள்ள இணைப்பை 'க்ளிக்' செய்து இட்டுச்செல்லும் வேறொரு இணையத் தளத்திலும் அவர்கள் உன்னிப்புடன் இருக்க வேண்டும். அவை நகல் இணையத் தளங்களாக இருக்கலாம்.

நேற்றைய சாலைக்காட்சியில் வருகையாளர்கள் இணையப் பாதுகாப்பு தொடர்பான போட்டிகளிலும் பங்கேற்றனர். படம்: சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு ஆணையம்