முதலீட்டாளர்களை ஏமாற்றிய மாதுக்கு 70 மாதம் சிறை

முதலீட்டாளர்களை ஏமாற்றிய மாதுக்கு 70 மாதம் சிறை

1 mins read

முதலீட்டாளர்கள் எட்டு பேரை ஏறக்குறைய $1 மில்லியன் வரை ஏமாற்றிய 43 வயது மாதுக்கு நேற்று 70 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 'கோல்டன் பிரஸ்டிஜ்' என்ற தனது நிறுவனத்தில் முதலீடு செய்யும்படி பலரையும் ஏமாற்றியதாகக் கூறும் 50 குற்றச்சாட்டுகளில் 12ன் பேரில் காரன் டான் ‌ஷின் ஜு என்ற அந்த மாது குற்றத்தை ஒப்புக்கொண்டார். மோசடிச் செயலுக்கு இலக்கானவர்கள் அந்த மாதிடம் மொத்தம் $979,930 கொடுத்து ஏமாந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.