புதிய உச்சம்; சிங்கப்பூருக்கு 16.4 மி. சுற்றுப்பயணிகள் வருகை

1 mins read

சிங்கப்பூர் பயணத்துறை இரண்டு அம்சங்களில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சிங்கப்பூருக்கு வருகையளித்த சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதி கரித்துள்ளது. அதோடு சிங்கப்பூரில் சுற்றுப் பயணிகள் செலவழித்த தொகை யும் சாதனை அளவைத் தொட்டுள் ளது. கடந்த ஆண்டு சிங்கப்பூருக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண் ணிக்கை 16.4 மில்லியன். இது, முந்தைய ஆண்டைவிட 7.7% அதிகரிப்பு என்று சிங்கப்பூர் பயணத்துறை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. சிங்கப்பூரில் சுற்றுப்பயணிகள் செலவழித்த தொகையும் 13.9 விழுக்காடு கூடி 24.8 பில் லியன் வெள்ளியை எட்டியிருக்கிறது.