போலிஸ் சாலைத் தடுப்பை மீறியவர் போதைப் பொருள் குற்றத்துக்காக கைது

போலிஸ் சாலைத் தடுப்பை மீறியவர் போதைப் பொருள் குற்றத்துக்காக கைது

1 mins read

காலாங் ரோட்டில் நேற்று அதிகாலை போலிஸ் மேற்கொண்ட சாலைத் தடுப்பு சோதனையை மீறி, வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டிய 36 வயது ஆடவர் பின்னர் போதைப் பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டார். ஆடவர் காரை நிறுத்தாமல் ஓட்டியதால், மற்ற போலிஸ் வாகனங்களும் மோட்டார் சைக்கிள்களும் அவரைத் துரத்தி கேலாங் லோரோங் 14ல் நேற்று அதிகாலை 2.30 மணிக் குப் பிடித்தன. காரை போலிஸ் துரத்திக் கொண்டு சென்ற தைப் பார்த்த ஒருவர், "துரத்திப் பிடித்த காரின் கதவைத் திறந்து அதை இரு போலிஸ் அதிகாரிகள் சோதித்துக் கொண்டிருந்தனர்," என்றார்.