சிங்கப்பூரின் கொண்டோமினிய மறுவிற்பனை வீடுகளின் மறுவிற்பனை விலைகள் ஜனவரியில் 1.1% அதிகரித்தது என எஸ்ஆர்எக்ஸ் சொத்து அமைப்பின் முன்னுரைப்பு கூறுகிறது. கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்த விகிதம் 0.5% உயர்வைதான் கண்டது. தீவின் பிரதான பகுதியில் உள்ள மறுவிற்பனை சொத்து களின் விலைகள் மாதத்துக்கு மாதம் என்ற அடிப்படையில் 1.9% உயர்ந்தது. மத்திய பகுதியிலும் அதற்கு சற்று அப்பாலும் உள்ள எஞ்சிய வீடுகளில் மறுவிற்பனை விலைகள் முறையே 1.5%, 0.4% என்று இருந்தன.
கொண்டோமினிய மறுவிற்பனை வீடுகள் ஜனவரியில் 1.1% உயர்வு
1 mins read

