குன்ஹா, ஆச்சார்யா வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு

குன்ஹா, ஆச்சார்யா வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு

1 mins read

பெங்களூர்: நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, வழக்கறிஞர் ஆச்சார்யா ஆகிய இருவரது வீடுகளிலும் கர்நாடக மாநில காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 2014ஆம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெய லலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தனிக்கோர்ட்டு நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா தீர்ப்பு வழங்கியபோதே பெங்களூரில் வன்முறை வெடித்தது. இதனால் மீண்டும் அதுபோல சம்பவங்கள் நடந்துவிடாமல் இருக்க நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா, சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் ஆச்சார்யா ஆகியோரது வீடுகளுக்குப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.