தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'ஜிசிஇ' மேல்நிலைத் தேர்வு முடிவுகள்

1 mins read

2016ஆம் ஆண்டு தேர்வு எழுதிய 'ஜிசிஇ' மேல்நிலைத் தேர்வுகள் பிப்ரவரி 24ஆம் தேதி, வெள்ளிக்கிழமை வெளியிடப்படும். மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் பிற்பகல் 2.30 மணியில் இருந்து தேர்வு முடிவுகளைப் பெறலாம் என்று நேற்று கல்வியமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மாணவர்களுக்கு அஞ்சல் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும். சிங்பாஸ் வைத்திருப்போர், தங்களின் தேர்வு முடிவுகளை இணையம் வழி காணலாம். சிங்கப்பூர் தேர்வுகள் மற்றும் மதிப்பீட்டு ஆணையத்தின் www.seab.gov.sg என்னும் இணையத்தளத்தில் தேர்வு முடிவுகளைக் காணமுடியும்.