காணாமற்போன இளையரை தேடும் பணியில் 70 பேர்

காணாமற்போன இளையரை தேடும் பணியில் 70 பேர்

1 mins read
b6b8ab8b-0217-4fb0-b2a5-606236cfb37b
-

காணாமற்போன சாகச நடைப் பயணி ஸ்டீவர்ட் லீ கூன் ஹோங், 27, தேடப்பட்டு வருகிறார். 70 பேர் சிங்கப்பூரின் பூங்காக்களி லும் இயற்கை வனப் பகுதிகளிலும் அவரைத் தேடி வருகின்றனர். கடந்த வெள்ளிக்கிழமை பிற் பகல் முதல் அந்த ஆடவரைக் காணவில்லை என்று லீ யுங்யின் எனப்படும் அவரது சகோதரி 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித் தாளிடம் தெரிவித்தார். திரு லீ தமது கைபேசியை வீட்டில் வைத்துச் சென்றதாகவும் அவர் அவ்வப்போது இதுமாதிரி செய்வார் என்றும் அந்தப் பெண் கூறினார். ஆனால், வெளியில் தங்குவதாக இருந்தால் அதுபற்றி வீட்டுக்குத் தெரிவிப்பார் என்றும் குமாரி லீ குறிப்பிட்டார்.

விவரம்: epaper.tamilmurasu.com.sg