முதல் முறையாகவும் அதை மறு விற்பனை வீடாகவும் வாங்க விரும்பும் திருமணமான தம்பதி யருக்குக் கூடுதல் மானியம் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் ஹெங் சுவீ கியட் அறிவித்துள்ளார். முன்னர் இந்த மத்திய சேம நிதி வீட்டு மானியம் $30,000 ஆக இருந்தது. இப்போது, நான்கறை அல்லது அதற்கும் சிறிய வீடுகளை வாங்க விரும்பும் தம்பதியருக்கு அந்த மானியம் $50,000ஆக உயர்த்தப்படுகிறது. ஐந்தறை அல்லது அதற்கும் பெரிய வீடு வாங்க விரும்புவோருக்கான மானியம் $40,000ஆக அதிகரிக்கப்படுகிறது.
பட்ஜெட் 2017: முதல் முறை மறுவிற்பனை வீடு வாங்க கூடுதல் மானியம்
1 mins read
-

