இஸ்ரேல்- பாலஸ்தீன அமைதிக்கு ஒரே தீர்வு இரு நாடுகளை ஏற் படுத்துவதுதான் என்று பிரதமர் லீ சியன் லூங் நேற்று தெரிவித்தார். சிங்கப்பூருக்கு வருகை அளித் துள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்ச மின் நெட்டன்யாகுவுடன் நேற்று கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் பேசிய திரு லீ, இஸ்ரேலும் பாலஸ் தீனமும் நேரடி பேச்சுவார்த்தை களைத் தொடங்கி நீடித்து நிலைத் திருக்கும் தீர்வைக் காணமுடியும் என்று சிங்கப்பூர் நம்புவதாகக் குறிப்பிட்டார். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக் கும் இடையில் அமைதி ஏற்பட இருநாடுகளை ஏற்படுத்துவதுதான் தீர்வு என்றும் இந்தத் தீர்வுதான் இஸ்ரேல், பாலஸ்தீனர்களுக்கும் மத்திய கிழக்கு மக்களுக்கும் அமைதியை ஏற்படுத்தும் என்றும் சிங்கப்பூர் எப்போதுமே நம்பி வந் துள்ளது என்றார் திரு லீ.
சிங்கப்பூருக்கு வருகை அளித்துள்ள இஸ்ரேலிய பிரதமர் நெட்டன்யாகு (இடது) நேற்று இ-ஸ்தானாவில் பிரதமர் லீ சியன் லூங்கை சந்தித்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

