நினைவாற்றல் குறைபாடு உள்ள நோயாளிகள் தங்களது இல்லச் சூழலில் தங்கியிருப்பதே மேலா னது என்றும் அதற்கான வழி முறைகளை அரசாங்கம் காண வேண்டி உள்ளது என்றும் நிதி, சட்ட மூத்த துணை அமைச்சர் இந்திராணி ராஜா தெரிவித்துள் ளார். தங்களுக்குப் பழக்கப்பட்ட சுற்றுச்சூழலில், அதாவது தங் களது வீட்டில் தங்கிக்கொள்வதே அதிக வசதியாக இருப்பதாக அவர்களில் பெரும்பாலானோர் கருதுகின்றனர் என்றார் குமாரி இந்திராணி. மூளை அசதி நோய் சங்கத் திற்கு நேற்றுக் காலை வருகை அளித்தபோது அவர் செய்தி யாளர்களிடம் பேசினார். "நினைவாற்றல் குறைபாடு உடையவர்கள் தாதிமை இல்லத் தில் தங்கி இருப்பதைக் காட்டி லும் வீட்டில் இருப்பதற்கான வழிவகைகள் காணப்படும் போது அவர்களைப் பராமரிப் பவர்களுக்கு ஆதரவான அம்ச மும் அவற்றில் உள்ளடங்கும்.
நினைவாற்றல் குறைபாடு: இல்லச் சூழலே சிறந்தது
1 mins read
-

