உயர்ந்துள்ள தொடக்க சம்பளங்கள்

உயர்ந்துள்ள தொடக்க சம்பளங்கள்

1 mins read

கடந்த ஆண்டு வேலை வாய்ப்பு பெற்ற பல்கலைக்கழகப் பட்டதாரி களுக்கான சராசரி மாதாந்திர சம்பளம் புதிய உச்சத்துக்கு உயர்ந்துள்ளது என்று ஆய்வு ஒன்று கூறியுள்ளது. 2015ஆம் ஆண்டு பட்டம் பெற்று கடந்த ஆண்டு வேலைக் குச் சென்ற பட்டதாரிகளின் தொடக்க சம்பளம் $3,300 ஆக இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு பட் டம் பெற்று வேலைக்குச் சேர்ந்த பட்டதாரிகளுக்கான சம்பளம் $3,360க்கு உயர்ந்தது. சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் நிர் வாகப் பல்கலைக்கழகம் ஆகி யவை இணைந்து நடத்திய பல் கலைக்கழகப் பட்டதாரிகளுக் கான வேலைவாய்ப்பு ஆய்வு 2016ன் முடிவுகள் நேற்று வெளி யிடப்பட்டன. கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்ட இந்த ஆய்வில் 10,904 புதிய பட்டதாரிகள் பங் கேற்றனர்.

விவரம்: epaper.tamilmurasu.com.sg