பயிற்சி வகுப்புகளில் பங்கேற் காமலேயே அந்த வகுப்புகளுக்குச் சென்றதாகக் கூறி சுமார் 4,400 பேர் போலியான கோரிக்கைகளைத் தாக்கல் செய்து 'ஸ்கில்ஸ் ஃபியூச்சர் கிரெடிட்' திட்டத்தின் கீழ் பணம் பெற்றது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக 'ஸ்கில்ஸ் ஃபியூச்சர் சிங்கப்பூர்' அமைப்பு தெரிவித்திருக்கிறது. அந்தத் தனிநபர்களிடம் இருந்து பணத்தைத் திரும்பப் பெறுவதற்காக அவர்களுக்கு அந்த அமைப்பு கடிதம் அனுப்பி உள்ளது. இப்படி போலியான கோரிக்கைகள் மூலம் மொத்தம் $2.2 மில்லியன் பணத்தை அவர்கள் பெற்றுள்ளனர். அந்தக் கோரிக்கைகளில் மூன்றில் இரண்டு கடந்த மாத இறுதிவாக்கில் தாக்கல் செய்யப் பட்டன என்றும் தரவுப் பகுப்பாய்வு முறை மூலம் அவை போலியா னவை என்பது கண்டுபிடிக்கப் பட்டன என்றும் கூறப்பட்டது.
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திட்டம்: போலி கோரிக்கைகள் மூலம் $2.2 மில்லியன் மோசடி
1 mins read

