இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட கரியமிலவாயு வரியினால் மின்சக்தி உற்பத்தியாளர்களுக்கு செலவு அதிகரிக்கும். இதனால் பயனீட்டாளர்களுக்கான மின்சக்தி கட்டணமும் உயரக்கூடும் என நிறுவனங்களும் பொருளியல் நிபுணர்களும் கூறியுள்ளனர். எதிர்வரும் 2019ஆம் ஆண்டில் இந்த வரி அமலுக்கு வரும். வெளியிடப்படும் ஒரு டன் கரியமிலவாயுவுக்கு $10 முதல் $20 வரி விதிக்கப்படும். மின்சக்தி ஆலைகள், கரியமில வாயு வெளியேற்றும் பிற நிறுவனங்கள் மீது இந்த வரி விதிக்கப்பட்டாலும் இறுதியில் பயனீட்டாளர்களுக்கு மின்சக்தி கட்டணம் உயரக்கூடும்.
கரியமிலவாயு வரியினால் மின்சக்தி கட்டணம் உயரக்கூடும்
26 Feb 2017 - 6:00 am
1 mins read
