புதிய வரவுசெலவுத் திட்ட விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று தொடக்கம்

புதிய வரவுசெலவுத் திட்ட விவாதம் நாடாளுமன்றத்தில் இன்று தொடக்கம்

1 mins read

நாடாளுமன்றத்தில் பிப்ரவரி 20ஆம் தேதி நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் தாக்கல் செய்த புதிய வரவுசெலவுத் திட்டம் பற்றிய விவாதம் இன்று தொடங்குகிறது. வேகமாக மாறி வருகின்ற, தொழில்நுட்பத்தால் சூழப்பட்ட உலகில் சிங்கப்பூர் பொருளியலின் எதிர்காலம் எப்படி இருக்கும் என் பதிலேயே உறுப்பினர்கள் ஒருமித்த கவனம் செலுத்தப்போவதாகத் தெரிகிறது. எதிர்கால பொருளியல் குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளை எப்படி நிறைவேற்றுவது, தொழில் நுட்ப மாற்றங்கள் காரணமாக ஊழியர்களிடையே ஏற்படக்கூடிய தாக்கம் என்ன, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்ற பல அம்சங்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மன்றத்தில் எழுப்ப விருக்கிறார்கள்.

இன்றைய செய்திகள்: தமிழ்முரசின் இ-பேப்பரில் பார்க்கவும்