பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த 30 வயது பணிப் பெண்ணை மானபங்கப் படுத்தியதற்காக சிங்கப்பூர் நிரந்தரவாசியான ஜாக்கோப் குமார் ரோஸ் பி. இசாக் ரோஸ், 40, என்பவருக்கு நேற்று 11 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு மூன்று பிரம்படிகள் கொடுக்கும்படி உத்தரவிடப்பட்டது. அந்தப் பணிப்பெண் 2015 நவம்பர் 28ஆம் தேதி வேலையைத் தொடங்கினார். இரண்டு மாதத்திற்குள்ளேயே இந்த முதலாளி அவரிடம் தன்னுடைய கைவரிசையைத் தொடங்கிவிட்டார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. முதலாளி தன்னிடம் நடந்துகொண்ட விதம் பற்றி அந்தப் பணிப்பெண் தன்னை வேலைக்கு சேர்த்துவிட்ட நிறுவனத்திடம் புகார் தெரிவித்தார். அந்த நிறுவனம் மலேசியரான ஜாக்கோப் குமாரை எச்சரித்தது. இதனையடுத்து, அந்த முதலாளி பணிப்பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். இது 2016 ஜனவரியில் நிகழ்ந்ததாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
மானபங்கம்: முதலாளிக்குத் தண்டனை
1 mins read
-

