பொறுப்புடன் திறம்பட செயல்பட்டவர்களுக்குப் பாராட்டு

பொறுப்புடன் திறம்பட செயல்பட்டவர்களுக்குப் பாராட்டு

1 mins read
ce062109-2d5c-4067-84ff-729b96f90317
-

புலாவ் தீக்கோங்கில் வேலை செய்துகொண்டிருந்த புவா யோங் டெக், 55, என்பவருக்கு திடீ ரென்று இதயக் கோளாறு ஏற் பட் டது. அதைக் கண்ட இந்த மருத் துவ உதவியாளர்கள் குழு உடனடியாக செயலில் இறங்கி அந்த ஆடவரை காப்பாற்றி விட்டது. அந்த ஒப்பந்தக்காரர் ஒருவாரம் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பிலிருந்து குணமடைந்து இப்போது வீட்டுக் குத் திரும்பி இருக்கிறார். தக்க சமயத்தில் ஒருவரின் உயிரைக் காத்த இந்த மருத்துவ உதவியாளர்கள் குழுவை தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் நேற்று ஃபேஸ்புக் பக்கத்தில் பாராட்டினார். மருத்துவ உதவியாளர்களும் அதிகாரிகளும் பயிற்சியிலும் சோடனைப் பயிற்சியிலும் வழக்க மாக ஈடுபடுவதால் அவர்கள் உதவி தேவைப்படும்போது விரைந்து உதவ முடிகிறது.

சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய திரு புவாவை அவரின் வீட்டுக்குச் சென்று மருத்துவ உதவிக் குழுவினர் சந்தித்தனர். படம்: ஃபேஸ்புக்/ இங் எங் ஹென்.