தேசிய பல்கலைக்கழக வர்த்தகப் பள்ளியில் பாடத்திட்டங்கள் மாற்றியமைப்பு

தேசிய பல்கலைக்கழக வர்த்தகப் பள்ளியில் பாடத்திட்டங்கள் மாற்றியமைப்பு

1 mins read

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் அதன் வர்த்தகப் பள்ளியில் பாடத்திட்டங்களை மாற்றியமைக்கவுள்ளது. வர்த்தக நிர்வாகம், வர்த்தக நிர்வாகம் (கணக்கியல்) ஆகிய இரு துறைகளில் புதிய மாற்றங்கள் அமையும். இவ்வாண்டு ஆகஸ்ட் மாதத்தில் வர்த்தகப் பள்ளியில் சேரவிருக்கும் மாணவர்களுக்கு இது குறித்த தகவல் தெரிவிக்கப்படும்.

மாறிவரும் பொருளியல் சூழலில் வர்த்தக மாணவர்களை ஆயத்தப்படுத்தவும், பாடத்தைத் திட்டமிட அவர்களுக்கு கூடுதல் நீக்குப்போக்கை வழங்கவும் இந்த மாற்றங்கள் அமைந்ததாக வர்த்தகப் பள்ளியின் துறைத் தலைவர் பேராசிரியர் பெர்னர்ட் இயுங் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.