சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் (எஸ்பிஎச்) நிறுவனம் சீனாவின் ஆகப் பெரிய இணையப் படைப்பு சேவைத் தளமான 'இஸெட்பிஜே நெட்வர்க், இங்க்' நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தத்தில் நேற்று முன்தினம் கையெழுத்திட்டது. எஸ்பிஎச் நிறுவன மின்னிலக்க பிரிவின் முயற்சியில், இரு நிறுவனங்களும் வர்த்தகங்களுக்கு இடையிலான இருமொழி இணையப் படைப்பு சேவைத் தளத்தை உருவாக்கும். சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட தென்கிழக்காசிய நாடுகளில் உள்ள சிறிய, நடுத்தர நிறுவனங்களை இந்தத் தளம் இலக்காக கொண்டிருக்கும்.
சீன நிறுவனத்துடன் கூட்டு முயற்சி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட எஸ்பிஎச்
1 mins read

