சிங்கப்பூரின் தேசிய சேவையாளர் கள் 850 பேர் மற்றும் தற்காப்பு அமைச்சின் அலுவலர்கள் ஆகி யோரின் சொந்த விவரங்கள் திருடப்பட்டுள்ளன. குறிவைத்து, நன்கு திட்ட மிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட இணையத் தாக்குதல் என்று தற் காப்பு அமைச்சு இதனைக் குறிப் பிட்டுள்ளது. அமைச்சின் 'ஐ=நெட்' எனப் படும் தகவல் தொடர்பு முறையில் மேற்கொள்ளப்பட்ட அத்துமீறல் பிப்ரவரி மாதத் தொடக்கத்தில் கண்டறியப்பட்டது. தேசிய சேவையாளர்களுக்கும் அமைச்சின் ஊழியர்களுக்கும் இணையச் சேவையையும் அவர் களுக்கு தனிப்பட்ட தகவல் தொடர்பையும் வழங்குகிறது 'ஐ-நெட்'. அத்துடன் அமைச்சின் தனித்துவம் வாய்ந்த ஆயிரக் கணக்கான கணினி முனையங் கள், ஆயுதப்படை முகாம்கள், அதன் வளாகங்கள் ஆகியவற்றுக் கும் இணைய வசதிகளை அது வழங்குகிறது.
தற்காப்பு அமைச்சில் இணைய ஊடுருவல்
1 mins read

