எஸ்எம்ஆர்டி வரலாற்றிலேயே ஆக மோசமானதாகக் கருதப்படுகின்ற, இரு ஊழியர்களின் மரணத்திற்கு காரணமான பாதுகாப்பு குறைபாடு களுக்காக அந்த நிறுவனத்துக்கு $400,000 அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. தெம்பனிஸ், பாசிர் ரிஸ் எம்ஆர்டி நிலையங்களுக்கு இடை யில் கடந்த ஆண்டு மார்ச் 22ஆம் தேதி சென்றுகொண்டிருந்த ரயில், நஸ்ருல்ஹுடின் நஜுமுடின், 26, முகமது அசிரஃப் அகமது புஹாரி, 24, ஆகிய பயிற்சி ஊழியர்கள் மீது மோதியதில் இருவரும் உயிரிழந்தனர். ரயில் தண்டவாளத்தில் ஏற் பட்ட சமிக்ஞை கோளாறு குறித்து விசாரணை மேற்கொள்ள அங்கு அனுப்பப்பட்ட 15 பேர் குழுவில் அந்த இரு ஊழியர்களும் இருந் தனர். பணியில் சேர்ந்து இரு மாதங்கள் மட்டுமே ஆகியிருந்த நிலையில் இருவரும் அன்று வேலையிடப் பயிற்சிக்காக சென்று இருந்தனர்.
எஸ்எம்ஆர்டி நிறுவனத்துக்கு $400,000 அபராதம்
1 mins read

