நோயாளிக்கு ஒவ்வாமை ஏற்படக்கூடிய மருந்தை வழங்கு வதற்கான மருந்துச் சீட்டை எழுதிக் கொடுத்ததற்காக பல் மருத்துவர் யீ யிங் சூனுக்கு $7,000 அபராதம் விதிக்கப் பட்டுள்ளதாக சிங்கப்பூர் பல் மருத்துவ மன்றம் நேற்று அறிக்கை வெளியிட்டது. கடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதி அவர் நோயாளிக்கு அளித்த மருந்தினால் நோயாளிக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாகவும் அது மிகவும் மோசமான விளைவுகளைக்கூட ஏற்படுத்தி இருக்கக்கூடும் எனவும் ஒழுங்கு நடவடிக்கைக் குழு தெரிவித்ததுடன் அவரது இந்த கவனக்குறைவான செயலுக்குக் கண்டனமும் தெரிவித்தது. ஒவ்வாமையைச் சரிசெய்வதற்கான செலவையும் மருத்துவர் யீ ஏற்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது மன்றம்.
ஒவ்வாத மருந்து அளித்த பல் மருத்துவருக்கு $7,000 அபராதம்
1 mins read

