இந்தியர் உட்பட 10 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டு

இந்தியர் உட்பட 10 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டு

1 mins read

நீர்க்கசிவைச் சரிசெய்தல் போன்ற பொது வேலைகளில் ஈடுபடும் 'டிஏசி காண்ட்ராக்ட்ஸ்' நிறுவனத் தில் பணிபுரியும் ஊழியர்கள், முன்னாள் ஊழியர்களில் 10 பேர் மீது நீதிமன்றத்தில் ஊழல் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டு உள்ளது. அவர்கள் இரண்டு முதல் 150 குற்றச்சாட்டுகள் வரை எதிர்நோக்குகின்றனர். ஒவ்வொரு வரும் $490 முதல் $59,074.50 வரையிலான தொகையை லஞ்ச மாகக் கொடுத்ததாக நேற்று குற்றஞ்சாட்டப்பட்டது. டிஏசி காண்ட்ராக்ட்ஸ் நிறு வனத்துடன் வர்த்தகத் தொடர்பு கொள்வதை ஊக்குவிக்கும் விதத்தில் பல்வேறு நிறுவனங்களின் ஊழியர்களுக்கு இந்தப் பணம் வழங்கப்பட்டதாகக் கூறப் பட்டது.