நாடாளுமன்றச் செய்தி: பயன்படுத்தப்பட்ட ஆயுதப்படை சீருடைகளைச் சேகரிக்க மேலும் அதிக வசதிகள்

நாடாளுமன்றச் செய்தி: பயன்படுத்தப்பட்ட ஆயுதப்படை சீருடைகளைச் சேகரிக்க மேலும் அதிக வசதிகள்

1 mins read

பயன்படுத்தப்பட்ட ராணுவச் சீருடை களுக்காக அதிகமான சேகரிப்பு மையங்களுக்கு சிங்கப்பூர் ஆயுதப் படை ஏற்பாடு செய்யும் என்று தற்காப்பு மூத்த துணை அமைச்சர் முகமது மாலிக்கி ஓஸ்மான் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். ராணுவ உடைகள் பாத்தாம் தீவுக்குக் கடத்தப்பட்ட அண் மையச் சம்பவத்தைத் தொடர்ந்து இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபலமான பகுதிகளின் அருகே உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட முகாம்களின் முகப்பில் சீருடை சேகரிப்புத் தொட்டிகள் அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் வைக்கப்பட இருப் பதாக அவர் கூறினார். இவ்வாறு பெறப்படும் உடைகள் ஒருவழிப் பெறுதல் என்றும் மீண்டும் திருப்பித்தரப்படமாட்டா என்றும் டாக்டர் மாலிக்கி குறிப் பிட்டார்.