அரசு ஊழியருக்கு ஆறு மாத கைக்குழந்தை விடுப்புத் திட்டம்

அரசு ஊழியருக்கு ஆறு மாத கைக்குழந்தை விடுப்புத் திட்டம்

1 mins read

அரசாங்கத் துறையில் வேலை செய்வோருக்கு வரும் ஜூலை முதல் சம்பளம் இல்லாமல் மேலும் அதிகமாக கைக்குழந்தைப் பரா மரிப்பு விடுப்பு கிடைக்கவிருக் கிறது. பிரதமர் அலுவலக மூத்த துணை அமைச்சர் ஜோசஃபின் டியோ நேற்று நாடாளுமன்றத்தில் இதனை அறிவித்தார். அரசாங்கத்துறை அதிகாரி களும் அவர்களின் வாழ்க்கைத் துணையும் கூடுதலாக நான்கு வார கால விடுப்பைப் பெற புதிய மூன்று ஆண்டு முன்னோடித் திட் டம் ஒன்று வகை செய்கிறது. இந்தச் சம்பளம் இல்லாத நான்குவார கால விடுப்பு பெற்றோர் ஒருவருக்கு வழங்கப்படும். இதை யும் சேர்த்துப் பார்த்தால் ஒரு தம்பதிக்கு மொத்தம் ஆறு மாதம் குழந்தைப் பராமரிப்பு விடுப்பு நிச்ச யமாகும். இப்போது இந்த விடுப்பு 22 வாரமாக இருக்கிறது.