11,300 தந்தையர்கள் சம்பளத்துடனான தந்தையர் விடுப்புக்கு விண்ணப்பித்தனர்

11,300 தந்தையர்கள் சம்பளத்துடனான தந்தையர் விடுப்புக்கு விண்ணப்பித்தனர்

1 mins read

அரசாங்கம் வழங்கும் சம்பளத்துடன் கூடிய தந்தையர் விடுப்புக்கு சுமார் 11,300 தந்தையர்கள் விண்ணப்பித்தி ருந்தனர் என சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் ஃபைசல் இப்ராஹிம் நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி பதில் அங்கத்தில் தெரிவித்தார். இவர்களில் 16 விழுக்காட்டினர் அரசாங்க சேவை அதிகாரிகள் என்றும் தெரிவித்த டாக்டர் ஃபைசல், குழந்தை பிறப்புக்குப் பிறகு 12 மாதங்களில் அவர்கள் இந்த விடுப்பை எடுக்கலாம் என்பதால் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றார்.