இமாம் விவகாரம்: அமைச்சர்கள் கருத்து

இமாம் விவகாரம்: அமைச்சர்கள் கருத்து

1 mins read

கிறிஸ்தவர்கள், யூதர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் சமய போதகர் ஒருவர் கருத்துத் தெரிவித்ததாக ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்ட காணொளி புய லைக் கிளப்பியதாக தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்ட முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் யாக்கூப் இப்ராஹிம், முஸ்லிம் சமூகத்தார் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். பரஸ்பர மரியாதை, நல் லிணக்கம் போன்ற பண்புகளைக் கடைப்பிடிப்பதால் தீவிரவாதத் துக்கும் பிரிவினைவாதத்துக்கும் சிங்கப்பூரில் இடமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த சமய போதகரிடம் இந்த நிகழ்வு குறித்து போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.