இறுதி ஊர்வலத்தில் கும்பல்

இறுதி ஊர்வலத்தில் கும்பல்

1 mins read

தொடர்பான முழக்கமிட்ட எழுவர் கைது கும்பல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக 27 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட எழுவர் கைது செய்யப்பட்டனர். ஜாலான் புக்கிட் மேராவில் சென்ற இறுதி ஊர்வலம் ஒன்றில் சில ஆடவர்கள் கும்பல் தொடர்பான முழக்கங்களை எழுப்பிச் சத்தமிடும் காட்சிகள் இணையத்தில் பதிவேற்றப்பட்ட காணொளி ஒன்றில் இடம்பெற்றதாக போலிஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. இம்மாதம் இரண்டாம் தேதி பதிவிடப்பட்ட அந்த 49 விநாடி காணொளியில் அந்த ஆடவர்கள் 'சா லாக் காவ்' அல்லது '369' என்று ஹொக்கியன் மொழியில் சத்தமாக முழக்கமிடும் காட்சி இடம்பெற்றது.