இணையப் பாதுகாப்பு நிபுணத்துவ திட்டம்

இணையப் பாதுகாப்பு நிபுணத்துவ திட்டம்

1 mins read

பொதுத் துறையில் இணையப் பாதுகாப்பு நிபுணர்களைக் கவரவும் மேம்படுத்தவும் தக்க வைத்துக்கொள்வதற்கும் அரசாங்கம் வரும் ஜூலை மாதத்தில் இணையப் பாதுகாப்பு நிபுணத்துவ திட்டத்தைத் தொடங்கும் என்றார் தகவல் தொடர்பு அமைச்சர் யாக்கூப் இப்ராஹிம். இணையப் பாதுகாப்பு அமைப்பு நிர்வகிக்கும் இத்திட்டம், தற்போதுள்ள இணையப் பாதுகாப்பு நிபுணர்களின் எண்ணிக்கையை அடுத்த சில ஆண்டுகளில் 600க்கு உயர்த்த இலக்கு கொண்டுள்ளது. இத்திட்டத்தில் சேரும் அதிகாரிகள் பொதுத் துறையின் முக்கிய அமைப்புகளில் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள். இணையத் தடயவியல், அபாய மதிப்பீடு, பாதுகாப்பு ஆளுமை, தயார்நிலை ஆகியவற்றில் அந்த அதிகாரிகளுக்கு விரிவான பயிற்சி அளிக்கப்படும்.