மேலும் நான்கு நூலகங்கள்

மேலும் நான்கு நூலகங்கள்

1 mins read

சிங்கப்பூரில் மேலும் நான்கு நூலகங்கள் செங்காங், புக்கிட் பாஞ்சாங், தெம்பனிஸ், பிடோக் ஆகிய இடங்களில் திறக்கப்படும் என்று தகவல் தொடர்பு அமைச்சர் யாக் கூப் இப்ராஹிம் நேற்று தெரிவித்தார். நூலகத்தில் மக்கள் சந்தித்து, வாசித்தலை தங்கள் வாழ்க்கைப்பாணி நடவடிக்கையாக மேற்கொள்ள இந்த நூலகங்கள் இணைந்து செயல்படும். சிங்கப்பூரில் வாசித்தலையும் கற்றலையும் ஒரு கலாசாரமாக மாற்றுவதில் இன்னும் அதிக பங்காளித்துவத்தையும் கூட்டு முயற்சியையும் அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது என்றும் அமைச்சர் சொன்னார்.