நிறுவனங்களை ஈடுபடுத்த மனிதவள அமைச்சின் 'மாறுபட்ட அணுகுமுறை'

நிறுவனங்களை ஈடுபடுத்த மனிதவள அமைச்சின் 'மாறுபட்ட அணுகுமுறை'

1 mins read

சிங்கப்பூர் எதிர்காலப் பொருளியலை நோக்கி பயணம் செய்யும் வேளையில், ஒருபடி மேல் சென்று புதிய மனப்போக்கை அமைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்று மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே கூறினார். இம்மாத தொடக்கத்தில் அமைக்கப்பட்ட மனிதவள பங் காளித்துவத்தின் மூலம் அரசாங் கம் இம்முயற்சியில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்தப் பங்காளித்து வத்தில் இடம்பெறும் 74 முதலாளி கள் சுமார் 100,000 சிங்கப்பூரர் களை வேலைக்கு அமர்த்தியுள்ள னர். நிறுவனங்கள் வெவ்வேறு துறைகளைச் சார்ந்தவை என்று குறிப்பிட்ட அமைச்சர் லிம், அவை மூன்று கடப்பாடுகளைப் பகிர்ந்து கொள்வதாகக் கூறினார்.